அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும்…!தினகரன்
என் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், ராகுலை முன்மொழிந்தாரோ என சந்தேகம் இருக்கிறது. கடந்ததேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கக்காரணம் திமுகதான் தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான்முடியும்.ஒருசிலமாநிலக்கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.கூட்டணி அமைப்பேன்.
என் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம். அதனால் எந்த நிலையிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் நான் பதவி விலகுவதாக பொய் பரப்புரை செய்கின்றனர். அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படிதான் வீழ்ந்தது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.