தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி….!தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குகிறார், பிரதமர் நரேந்திர மோடி .பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும்100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக. திட்டமிட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் பிரசாரத்திற்கு வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகை அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.