உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் – "3 இந்தியர்கள் தேர்வு"…!!

Default Image

25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில் 3 இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில்,
*காவ்யா கொப்பாரப்பு (18 வயது) – அமெரிக்க வாழ் இந்தியர்
*ரிஷப் ஜெயின் (14 வயது) – அமெரிக்க வாழ் இந்தியர்
*அமிகா ஜார்ஜ் (19 வயது) – பிரிட்டன் வாழ் இந்தியர்
இவர்கள் 3 பேரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
*18 வயதான, காவ்யா கொப்பாரப்பு – மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் திசுக்களை கணினியில் ஆராயக்கூடிய வழிமுறைகளை வகுத்துள்ளார்.
*14 வயதான, ரிஷப் ஜெயின் – 8 ஆம் வகுப்பு படிக்கிறார் இவர் புற்றுநோயைக் கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய கணினி வழிமுறையை வடிவமைத்து உள்ளார்.
*19 வயதான அமிகா – ஜார்ஜ்,ஹார்வர்டு பல்கலையில் படித்துவருகிறார் இவர் மாதவிடாய் காலத்தின் போது, அதற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்