தென் கடலோர மாவட்டங்களில் மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு…!!
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
கனமழை நாளைவரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.