சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்..!!
சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சரணடைய அவகாசம் கோரிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடு செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு, 31 ஆம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஒருமாதம் அவகாசம் வேண்டும் என்று சஜ்ஜன் குமார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சஜ்ஜன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.