தமிழக அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம்..!
அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் இதுவரை 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தையின் பெயரிலையே அருகில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.