மேகதாது அணை விவகாரம்: 4 மாநில அரசுகளுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் ஆலோசனை…!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசுகளுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான தடையில்லாத சான்றை, கர்நாடகத்திற்கு, மத்திய அரசு வழங்கியிருந்தது. இதற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளின் ஆலோசனைக் கூட்டத்தை, விரைவில் நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.