5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது….!

Default Image

சென்னை ராயபுரத்தில் காலமான 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 1972ல் கிளினிக் தொடங்கி இரண்டு ரூபாயில் தனது மருத்துவ சேவையை துவங்கி கடந்த 44 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் ஜெயசந்திரன்.
மக்களின் மனநிலையை அறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நடத்திவந்த ஜெயசந்திரன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
வயதானவர்களுக்கு செலவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயசந்திரன், தனது 67வது வயதில் நேற்று  காலமானார். அவரது இழப்பையடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் காலமான 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்