தேவகோட்டையில் உயர் மின் கம்பங்ககளை பராமரிக்க தவறிய மின் வாரியம் …பொதுமக்கள் அச்சம் …??
தேவகோட்டை நகராட்சி 23வது வார்டு, நித்திய கல்யாணி புரம்,பர்மாகாலனி குளக்கால் தெரு.இப்பகுதி கட்டுமான தொழிலாளர்கள்,மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலோ என்னவோ குளக்காள் தெருவை பராமரிப்பதில் கிட்டத்தட்ட நகராட்சி நிர்வாகம் மறந்துவிட்டது எனலாம்.
தற்போது மின்சார வாரியமும் இப்பகுதி மக்களின் உயிரை காப்பதில் இருந்து விலகி
நிற்கிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த உயர் மின்னழுத்த எச்.டி கம்பத்தில் இரவு நேரங்களில் தீப்பிடித்து எரிவதாலும் அப்பகுதி மக்கள் ஒருவித பீதியில் என்னவாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.எனவே மின்சார வாரியம் உடனடியாக இதனை சரிசெய்து மக்களின் அச்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கும் ,மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கையை வைத்துள்ளனர்.