கஜா நிவாரண நிதி : தமிழக அரசு தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அளித்துள்ள கஜா புயல் நிவார நிதி குறித்து தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது, உடைமைகள், உறவுகள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பினரும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.