ரூ.7,965,00,00,000 செலவு….புதிய ரூ.500, 2000 நோட்டுகளை அச்சடிக்க….மத்திய நிதியமைச்சர் தகவல்….!!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவு குறித்து, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-2017 நிதியாண்டில், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த 2017-2018 நிதியாண்டில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவு 4 ஆயிரத்து 912 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், 2015-2016 நிதியாண்டில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவு 3 ஆயிரத்து 421 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.