பிரதமர் பதவியை போல் நிதியமைச்சர் பதவியும் ஒரு விபத்து தான் – மன்மோகன் சிங்….!!
பிரதமர் பதவியை போல், மத்திய நிதியமைச்சர் பதவி கிடைத்ததும் ஒரு விபத்து தான் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் மன்மோகன் சிங் எழுதிய சேஞ்சிங் இந்தியா புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பேசிய மன்மோகன் சிங், தாம் அமைதியான பிரதமர் என்று கூறும் மக்களுக்கு இந்த புத்தகம் பதில் அளிக்கும் என்றார்.
செய்தியாளர்களை சந்திப்பதில் அஞ்சும் பிரதமராக தாம் ஒருபோதும் இருந்ததாக என்று கூறிய அவர், ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கு பிறகும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவி எப்படி ஒரு விபத்து போல் தற்செயலாக அமைந்ததோ, அதேபோன்று தான் மத்திய நிதியமைச்சராகவும் பணியாற்றினேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.