இனி கவலை வேண்டாம் …!உங்கள் குழந்தைகளுக்கு வீடு தேடி வரும் ஆதார் …!
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று ஆதார் அட்டையை பதிவு செய்து வழங்கும் திட்டத்தை தமிழக அரசு துவங்கியுள்ளது.
ஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல திட்டங்கள் என பலவற்றிற்கு ஆதார் ஆதாரம முக்கியமாக பார்க்கப்பட்டது.
முதலமைச்சர் பழனிச்சாமி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று ஆதார் அட்டையை பதிவு செய்து வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் துவங்கி வைத்துள்ளார். இதன் முலம் பணியாளர்கள் வீட்டிற்கே சென்று பொதுமக்களிடம் விவரங்களை பெற்றுகொள்ள முடியும்.