ராகுல் காந்தியை ஏன்..?முன்மொழிந்தேன்..!மு.க ஸ்டாலின் விளக்கம்..!!
திமுக கட்சியின் சார்பில் திறக்கப்பட்ட சிலை திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,மற்றும் ஆந்திர முதல்வர் ,கேரள முதல்வர்,புதுச்சேரி முதல்வர் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்,நிர்வாகிகள்,நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் விழாவாக கருதப்பட்ட திறப்பு விழா அரசியல் வட்டாரங்களிடையே பெரிதும் பேசப்பட்டது.அதே போல தான் அங்கு நடந்த உரையாடல்கள் பெரிதாக பார்க்கப்பட்டது.அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமராக ஆக்குவேன் அவரை பிரதமராக முன் மொழிகிறேன் என்று உரைத்தார்.
தற்போது இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அதில் பாஜகவின் பலே கோட்டையாக வர்ணிக்கப்பட்ட 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி என்று அறிக்கையில் புகழாரம் சூட்டி உள்ள ஸ்டாலின் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற தலைவர் ராகுல் என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் நாட்டை மத வெறியின் பிடியில் இருந்து விடுபட்டு ,நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டுமானால் அதற்கு ராகுலின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்த அவர் பாசிசத்தை எதிர்த்து நிற்கின்ற ஜனநாயக படையினை ஒன்று சேர்த்து நெறிப்படுத்தும் ஒரு வலுவான தலைமை ராகுல் என்ற அடிப்படையில் தான் அவரை முன் மொழிந்ததாக மு.க. ஸ்டாலின் தமது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.