அடிப்படை உரிமைகளை மீறிய வடகொரியா..!வறுத்தெடுக்கும் ஐநா..!!
பிற நாட்டுகளுக்கு தலைவலியாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு அணு ஆயுத சோதனைக்கு அந்நாட்டு அதிபர் தடை வித்தார்.இந்நிலையில் சற்று நிம்மதி அடைந்த மற்ற நாட்டுகளுக்கு திரும்பி வந்துட்டோம்னு சொல்லு என்று சினிமா பாணியில் தனது நாட்டின் வளங்களை அணு ஆயுதத் தயாரிப்புக்கு திருப்பியதன் மூலம் வடகொரியா மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி உள்ளதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வடகொரியாவில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தீவிர மற்றும் நாள்பட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர்கள் நாட்டு மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நாட்டின் வளங்களை எல்லாம் அந்நாட்டு அரசு அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா. சபையில் வடகொரியாவிற்கு எதிராக ஒருமித்த கருத்துடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இருந்தாலும் குறிப்பிட்ட சில நாட்டுக்கு எதிராக இது போன்ற தீர்மானங்கள் எல்லாம் ஏற்புடையதல்ல என்று ரஷ்யா மற்றும் சீனா, கியூபா மற்று வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.