இலங்கையில் மிகப்பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் – ரணில் விக்ரமசிங்கே…!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் இணைந்து இலங்கை தலைநகர் கொழும்புவில் நீதிக்கான மக்கள் கூட்டத்தை நடத்தினர். கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெரும்வகையில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும் மக்கள் தான் தங்களது பலம் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.