மகாராஷ்டிராவில் ரூ.41,000 கோடி வளர்ச்சிப் பணிகளை பிரதமர் துவக்கி வைக்கிறார்…!!
மகாராஷ்டிராவில் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி மும்பைக்கு வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலில் தானே மாவட்டத்தில் தானே-பிவண்டி-கல்யாண் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 5 வழித்தடம் மற்றும் தஹிசார்-மிரா பாயந்தர் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 9 வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் தானே-பிவண்டி-கல்யாண் வழித்தடம் 8 ஆயிரத்தி 416 கோடி ரூபாய் மதிப்பிலும் தஹிசார்-மிரா பாயந்தர் வழித்தடம் 6 ஆயிரத்தி 607 கோடி ரூபாய் மதிப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து சிட்கோ குடியிருப்புகள் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். மேலும் 3வது மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.