தேர்தலுக்குபின்தான் பிரதமர் யார் என்பது முடிவுசெய்யப்பட்டுள்ளது…!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  செயலாளர் சீதாராம்யெச்சூரி 

Default Image

கடந்தகால வரலாற்றை பார்க்கும்போது தேர்தலுக்குபின்தான் பிரதமர் யார் என்பது முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  செயலாளர் சீதாராம்யெச்சூரி  கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.
 
இந்நிலையில் ராகுல் தொடர்பாக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  செயலாளர் சீதாராம்யெச்சூரி  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  கடந்தகால வரலாற்றை பார்க்கும்போது தேர்தலுக்குபின்தான் பிரதமர் யார் என்பது முடிவுசெய்யப்பட்டுள்ளது. அது பற்றி தற்போதே அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. பிரதமராக யார் வரவேண்டும் என்று கருத்துகூற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  செயலாளர் சீதாராம்யெச்சூரி  கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்