அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை …!தினகரன்
அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தனர்.
இதன் பின்னர் டிடிவி தினகரன் கூறுகையில், அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.