மாலத்தீவுக்கு 140 கோடி டாலர்கள் நிதியுதவி – பிரதமர் மோடி…!!
மாலத்தீவுக்கு 140 கோடி டாலர்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்திருக்கும் சோலிஹ், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர். இருநாட்டிற்கும் இடையே விசா உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்களும் எழுத்தாகின. இதனையடுத்து பிரதமர் மோடியும், அதிபர் சோலிஹும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக கூறினார். மாலத்தீவுடன் சிறந்த பொருளாதார ஒத்துழைப்பை தொடர விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக மாலத்தீவுக்கு இந்தியா 140 கோடி டாலர்கள் நிதியுதவி அளிக்கும் என அறிவித்தார்.