ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…!!
ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை மக்களவையில் பா.ஜ.க கொண்டு வந்துள்ளது.
மக்களவை கூடியதும் காங்கிரஸ் எம்.பிகள் ரஃபேல் விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழகத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாக கூறி அதிமுக எம்.பிக்கள் அவையில் முழக்கமிட்டனர். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும் அமளிக்கு மத்தியில் திருநங்கைகள் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா நிறைவேற்றியது. கஜா புயல் நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி அதிமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க உறுப்பினர் அனுராக் தாகூர் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனையடுத்து மக்களவையை நாளை வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.