குட்கா லஞ்ச வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை …!
குட்கா வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் தஞ்சாவூரில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.அதேபோல் குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ.ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார்.
தொடர்ந்து 2 நாட்களாக முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 9 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது.
நேற்றுடன் சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் தஞ்சாவூரில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசனுக்கு சொந்தமான இடம் மற்றும் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான 2 இடங்களில் சிபிஐ நடைபெற்று வருகிறது.