மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றார்…!

Default Image

மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றார்.
போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில், மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதலமைச்சருக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது. பின்னர் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சிந்தியாவின் முழு சம்மதத்துடன், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று  மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவிஏற்பு விழா நடைபெற்றது.இதில்  மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றார். கமல்நாத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .கமல்நாத் 9 முறை எம்.பி.யாகவும் மத்திய தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 72 வயதாகும் கமல்நாத் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)