முறையான ஓட்டுநர் உரிமம் பெற்று வண்டி ஓட்டுங்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை…!!
முறையான ஓட்டுநர் உரிமம் பெற்று வண்டி ஓட்டுங்கள் என கல்லூரி மாணவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார்.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரின் அருகே சென்று உடனடி அபராதம் நடைமுறைப்படுத்தபடும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை முதல்முறை எச்சரித்து அனுப்பும்படி கூறிய முதலமைச்சர், இரண்டாம் முறை அபராதம் விதிக்குமாறு கூறினார். பின்னர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களை அழைத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது தவறு என அறிவுரை வழங்கினார்.