திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பிவித்து அசத்திய மாணவர்கள்…!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மகாபாரத பிரசங்கம் செய்யும் மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு திருப்பாவை, திருவெம்பாவையின் கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்று திருப்பாவை, திருவெம்பாவையை சரளமாக ஒப்பித்து அசத்தினார்கள். ராமகிருஷ்ண மடம் மற்றும் செங்கம் தமிழ்ச்சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.