சென்னை, பெசண்ட் நகரில் மனித அழுத்தத்தில் இருந்து காத்துக்கொள்ள மனித சங்கிலி விழிப்புணர்வு…!!
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருந்து இளம் பருவத்தினர் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
மகிழ்ச்சியான நகரம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதன் அடிப்படையில் சென்னை, பெசன்ட் நகரில் நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வில் கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ், நமக்கிருக்கும் பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் சொன்னாலேபோதும், பாரம் குறைந்து விடும் என்று கூறினார்.