பெய்ட்டி தீவிரப் புயலாக மாறியது…!நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்…!வானிலை ஆய்வு மையம்
பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி தீவிரப் புயலாக மாறியது .26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும். பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90கி.மீ முதல் 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.