குழந்தை தொழிலாளி அல்ல முதலாளி..! 13 வயதே ஆன சிறுவன் ..!மென்பொருள் நிறுவனத்தை துபாயில் நிறுவி..! வேலை வழங்கும் முதலாளியாக அசத்தல்..!!

Default Image

கேரளா மாநிலத்தை சேர்ந்த 13 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் துபாயில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி அதில் பலருக்கு வேலையும் வழங்கி வருகிறான்.
கேரள மாநிலம் திருவில்லா கிராமத்தைச் சேர்ந்த 13 வயதே ஆன ஆதித்யன் ராஜேஷ் என்கிற சிறுவன் தனது ஐந்து வயதில் தன் பெற்றோருடன் துபாய் சென்றுள்ளான். அங்கு கணினி பற்றி கற்றறிந்த அச்சிறுவன் தன்னுடைய 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கி அசத்திய நிலையில் பின்னர் இணையதளங்கள் மற்றும் லோகோக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளான்.இப்பொழுது 13  வயதில் தற்போது ஆதித்யன் ராஜேசுக்கு  ட்ரை நெட் சொலுசன்ஸ் Trinet solutions என்ற பெயரில் ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை துபாயில் நிறுவி உள்ளான். அதில் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலுகின்ற சக நண்பர்கள் 3 பேர்க்கு வேலை கொடுத்துள்ளான். இது குறித்து கூறுகையில் தனது 18 வயதில் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று சிறகடிக்க துடிக்கும் இளம் முதலாளி சிறுவன் கூறியுள்ளான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்