காங்கிரஸ் – திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்…! காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி
கருணாநிதியின் சிலை திறந்து வைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.அவர் பேசுகையில், கருணாநிதியின் சிலை திறந்து வைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட போராடிய போராளி கருணாநிதி.
தமிழுக்கு காங்கிரஸ் அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தான் கருணாநிதி வாழ்க்கையில் நிறைவான தருணம். தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி.தற்போதைய அரசியல் போராட்டத்தில் காங்கிரஸ் – திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.