தமிழகத்தில் அடுத்த அரசியல் கட்சி….இனி அரசியலை விட்டு விலக மாட்டேன்…நடிகர் கார்த்திக் உறுதி…!!
அரசியலில் இருந்து விலகி இருந்த நடிகர் கார்த்திக், தற்போது கட்சியின் பெயரை மாற்றி, மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். 2009 ம் ஆண்டு, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி துவக்கி, அரசியல் பிரவேசம் செய்த நடிகர் கார்த்திக், மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், அரசியலை விட்டு விலகி இருந்தார்.
தற்போது, மனித உரிமை காக்கும் கட்சி என்று தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றி, அரசியலில் மறுபிரவேசம் செய்துள்ளார்.இந்த கட்சியின் அறிமுக விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், மறுபிரவேசம் செய்துள்ள நிலையில், இனி அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.