நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட துக்க தினம் அனுசரிப்பு…!!
நிர்பயா பலாத்கார, கொலை குற்றவாளிகளுக்கு உடடினயாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த நிகழ்வின் 6 -ம் ஆண்டு நினைவு தினத்தை மகளிர் அமைப்புகள் இன்று அனுசரித்து வருகின்றன. இதனையொட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆசா தேவி, குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதுகுறித்த வழக்கில் உடனடியாக தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.