யார் பார்த்த என்ன…?? மனைவிக்கு செய்றதுல்ல என்ன கவுரவம்..!ரசிகர்களை வியக்க வைத்த தோனி..!!
இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனி போல் யாரும் கிடையாது என்று ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர் தோணி அவருடைய ஸ்டைலே தனியாக இருக்கும்.அப்படி தான் எல்லா விஷயத்திலையும் அதனை நிருபிக்கும் விதத்தில் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி பொது இடத்தில் தன் மனைவி சாக்க்ஷிக்கு ஷூ லேஸ் கட்டிகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.தோனி உலகம் முழுவதும் தனக்கென்று ரசிக பட்டாளத்தை கொண்டவர். தன் மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிகின்றத யார் பார்த்தாலும் பரவாயில்லை என் மனைவிக்கு நான் கட்ரேனு பொது இடத்தில் தன் மனைவிக்கு ஷூ சரிசெய்த தோனியின் செயல் அவருடைய ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீங்க தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால நீங்களே அத சரி செய்கிறீர்கள் என்று கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.
தோனியின் பாகுபாடற்ற இந்த செயல் அவருடைய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எவ்வளவு அழகான ஜோடி இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது என்றும் நீங்க இப்படி செய்யாதீர்கள் மாஹி பிறவு நாங்களும் இப்படி செய்ய வேண்டிவரும் என்று கருத்துகளை உள்ளம் பொங்க பொங்கிவருகின்றனர் ரசிகர்கள்.மேலும் உங்களுக்குத் தலை வணங்குகிறேன் மாஹி எனப் பலர் தங்களது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எத்தனை பெயர் புகழ் இருந்தாலும் தன் மனைவிக்கு நல்ல கணவன்,தன் மகளுக்கு நல்ல அப்பா தன் நாட்டிற்கு நல்ல குடிமகன் தன் அணிக்கு நல்ல வீரன் என்று வியக்கவைக்கிறார் நம்முடைய தல நம்ம தல தோணிக்கு பெரிய விசில போடு..!