நாட்டை விட்டு தப்பி ஓடும் கயவர்களின் கடன்களை காலி செய்யும் கல் நெஞ்சுக்கு..!! விவசாய கடனை தள்ளுபடி செய்ய மன வரவில்லையா..??காங்.சவுக்கடி கேள்வி..!!
தொழிலதிபர்ளால் கடனாக பெறபட்ட கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்யும் பொழுது அப்பாவி விவசாயிகளின் கடன்களை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள கமல்நாத் சவுக்கடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓங்கும் கையானது அங்கு தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளது.இந்நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாளை பதவியேற்க உள்ள நிலையில் அவர் நாளேட்டுக்கு பேட்டி அளித்தார் அதில் விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்வதே தனது அரசின் முதல் முன்னுரிமையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் மத்தியப் பிரதேசத மாநிலத்தை பொறுத்தவரை 70 % மக்கள் வேளாண்மையைச் சார்ந்து உள்ளனர் விவசாயத்தால் அவர்கள் கடன்சுமையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்ட அவர் தொழிலதிபர்களின் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்ய முடிகின்ற போது அப்பாவி விவசாயிகளின் கடன்களை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியாது என்று வினா எழுப்பினார்.
மேலும் அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைத்த 10நாட்களில் தனது அரசு வேளாண் கடன்களை எல்லாம் முழுமையாக தள்ளுபடி செய்யும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.