தீவிர புயலாக வலுப்பெறும் பெய்ட்டி' புயல்…!கடல் கொந்தளிப்புடன் காணப்படும்…!மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் நாளை வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், பெய்ட்டி’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறு.மையம் பெய்ட்டி புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணம் – காக்கிநாடா இடையே கரையை கடக்கும் .கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் நாளை வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னைக்கு தென் கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு, தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.