#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackSonia…!
சமூக வலைத்தளமான ட்விட்டரில் காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி வருவதற்கு முன்னர் கோ பாக் சோனியா (#GoBackSonia) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் சோனியா (#GoBackSonia) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.இது இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்#GOBACKMODI இந்த ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.