மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ராகுல் பங்கேற்பு….!!
நாளை மறுநாள் நடைபெற உள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதலமைச்சராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளார். ஒரே நாளில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.