திமுகவில் இணைந்து அமைச்சராகிவிடலாம் ..! பகல் கனவில் செந்தில் பாலாஜி இணைந்துள்ளார்…!அதிமுக செய்தி தொடர்பாளர் கடும் தாக்கு
திமுகவில் இணைந்து அமைச்சராகிவிடலாம் என்ற பகல் கனவில் செந்தில் பாலாஜி இணைந்துள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என திமுகவில் இணைந்து அமைச்சராகிவிடலாம் என்ற பகல் கனவில் அக்கட்சியில் செந்தில் பாலாஜி இணைந்துள்ளார் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.