முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதை தவறிவிட்டார்…!அமைச்சர் உதயகுமார்
பாதை தவறியதால் தான் தினகரன் தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதை தவறிவிட்டார்.பாதை தவறியதால் தான் தினகரன் தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.