கட்சி தாவுபவர்களுக்கு மக்களிடம் மரியாதையில்லை…! அமைச்சர் காமராஜ்

Default Image

கட்சி தாவுபவர்களுக்கு மக்களிடம் மரியாதையில்லை  என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் காமராஜ்  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தது உலக அதிசயமா? திமுகவில் இருந்து வந்தவர்தான் செந்தில் பாலாஜி. கட்சி தாவுபவர்களுக்கு மக்களிடம் மரியாதையில்லை  என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்