நோட்டிஸை ரத்துசெய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்….!!
டிடிவி தினகரனுக்கு வருமான வரித்துறைத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 1987-88 முதல் 1997-98 வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என தினகரன் கேட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரிச்சட்டப் படி, இரட்டை வருமானம் பெறுவதாக கருதினால் வருமான வரிக்கணக்குகளை மீண்டும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தினகரனின் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், வருமான வரித்துறை மேற்கொண்டு வரும் விசாரணைக்கு தினகரன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.