அதிமுக அரசு, விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்…!முதலமைச்சர் பழனிசாமி
சிலர் திட்டமிட்டு பொய் தகவல் பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், அதிமுக அரசு, விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.நீர் மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறோம். தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்துள்ளது .தமிழ்நாட்டின் உரிமையைப் பெற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது.அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் திட்டமிட்டு பொய் தகவல் பரப்புகிறார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.