கட்சிகளுக்கு தாவும் பச்சோந்தி…!கபட வேடதாரி..!!தாவிய உடன்பிறப்பை தாக்கிய அமைச்சர்..!!

Default Image

திமுகவில் இருந்து 2000 ஆம் ஆண்டு அதிமுகவில் அக்கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.பின்னர் சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட அவர் அதில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வரை  முன்னேறினார்.
Image result for senthilbalaji
பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் அக்கட்சியின் தலைமைக்கு வரவே இரவோடு இரவாக அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.பின்னர் 2016ல் அரவகுறிச்சி இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டிடிவி தினகரனின் அணியில் இணைந்த இவர் மட்டுமல்லாமல்  18 பேரை கொறடா பரிந்துரையின் பெயரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Image result for senthilbalaji
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து பின்பு தீர்ப்பு வெளியாகி அதில் சபாநாயகரின் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.இந்நிலையில் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யபோவதில்லை என்று பல தகவல்கள் கசிந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி தனது ஆதார்வார்களுடன் திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
Related image
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி அதிமுகவில் சேர முயற்சித்த செந்தில்பாலாஜி  சேரமுடியாமல் போனதால் திமுகவில் இணைந்துள்ளார். ஆனால் அவர் அங்கு வெறும் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் என்று கூறினார்.மேலும் கூறிய அவர் செந்தில்பாலாஜி பல கட்சிகளுக்குத் தாவுகின்ற பச்சோந்தி , பல வேஷங்களை போடும் வேடதாரி என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்