ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர்கள் தேர்வு செய்வது குறித்து ராகுல் காந்தி இன்று ஆலோசனை…!!
ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர்கள் தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தானில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இங்கு இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவர் சச்சின் பைலட் இடையே, முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு கடும் போட்டி உள்ளது. நேற்று நடந்த ஆலோசனையில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
மற்றொரு மாநிலமான சத்தீஷ்கரில், லோக்சபா, எம்.பி.,யான, தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பெஹல், மூத்த தலைவர், டி.எஸ். சிங்தியோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.