சபரிமலை விவகாரம் – கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு….!!
சபரிமலை விவகாரத்தில், கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில், கேரள அரசின் அணுகுமுறையைக் கண்டித்து, பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள தலைமை செயலகத்துக்கு எதிரே இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஐயப்ப பக்தர் ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் . படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஐயப்ப பக்தர் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.