கோவையில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்….!!!
கோவையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் கலாசாரம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் கோவை விழிகள் கலைக்குழுவினர் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நாடகங்கள், நடனம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மக்கள் அனைவரும் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.