இந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை….இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்…!!
இந்துக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றாத காரணத்தால் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
கோயில்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே மதுக் கடைகள் நடத்த அனுமதி கொடுப்பதாக கூறி புதுச்சேரியில் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் பின்னர் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்தார். ராமர் கோயில் கட்டுவது, பசுவதை தடை சட்டம் கொண்டு வருவது, நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், எனவேதான் 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாகவும் அவர் கூறினார். இந்துத்துவா கொள்கைகளை பிரதமர் மோடி தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியறுத்தினார்.