ரபேல் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு…! இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்….!
ரபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் 23-ஆம் தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றது .
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.அதேபோல் சிபிஐ-யும் ரபேல் விவகாரத்தில் வழக்கு ஓன்று தொடர்ந்தது. ரபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.