ராகுல்காந்தி பிரதமராவது உறுதி…! ஈவிகேஎஸ் இளங்கோவன்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவது உறுதி என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், கரைந்துவரும் தனது கட்சியை காப்பாற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்ய வேண்டும் .பாஜக தன்னையே காப்பாற்ற முடியாத நிலையில், தமிழக அரசை எப்படி காப்பாற்றும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. தெலங்கானா பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்தது தவறு என்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.