நடப்பு சாம்பியன்-நம்பர் ஒன்னை அடித்து துவம்சம் செய்த சிந்து..!!கர்ஜனை வெற்றி.!!

Default Image

உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீரங்கனையை இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி .வி சிந்து வீழ்த்தி அசத்தியுள்ளார்.
டாப்-8 வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான போட்டி சீனாவில் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
Related image
இதில் இந்தியாவை சேர்ந்த பி.வி சிந்து ஏ பிரிவில் இடம்பெற்றார். இந்நிலையில் தற்போது நடப்பு சாம்பியனான ஜப்பான் நாட்டு வீராங்கனை அகானே யமாகுச்சி  மற்றும் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் மற்றும் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஷாங் பீவென்  ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.
Related image
நேற்றைய முதல் ஆட்டத்தில் சிந்து நடப்பு சாம்பியனான ஜப்பான் நாட்டு வீராங்கனை அகானே யமாகுச்சியோவை எதிர்கொண்டு விளையாடினார்.இதில்  சிந்து 24-22 மற்றும் 21-15 என்ற நேர் செட் கணக்கில் தனது முதல் வெற்றியை ருசித்தார்.
Related image
இந்நிலையில் இன்று நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்யை எதிர்கொண்டு விளையாடிய சிந்து 14-21 என்ற செட் கணக்கில் முதல் செட்டை இழந்தார். இரண்டாவது செட்டில் சூதாரித்து விளையாடிய சிந்து 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.மூன்றாவது செட்டில் அனல் பறந்த நிலையில் தன் எதிர் விராங்ககனையின் தாக்குதல்களை அடித்து நொறுக்கி 21-18 என்று மூன்றாவதுசெட்டை பி.வி சிந்து தன் வசப்படுத்தினார்.இதில் என்ன சுவரஸ்யம் என்றால் இதுவரை தாய் ஜூ யிங்கை 7 முறை எதிர்கொண்டு விளையாடிய சிந்து தற்போது தான் வெற்றியை ருசித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin