முதல்வன் 2 படத்தில் களமிறங்கும் நடிகர் விஜய்….!!!
இயக்குனர் சங்கர் அவர்கள் இயற்றியுள்ள 2.0 படமானது கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி மிக பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த பாராட்டுகளும், வரவேற்புகளும் கிடைத்துள்ளது. இந்த படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படவேலைகளை முடித்தவுடன், முதல்வன் 2 படவேலைகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு பேட்டியின் போது ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் கதாநாயகனாக யாரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சங்கர், கமல் அல்லது ரஜினி இருவருள் ஒருவரை வைத்த எடுப்பேன், சரிவரவில்லை என்றால் நடிகர் விஜயை தேர்வு செய்வேன் என கூறியுள்ளார்.